பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் – கேப்டன் விஜயகாந்த் கண்டனம்

Default Image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது என கேப்டன் விஜயகாந்த் அறிக்கை. 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துக்குடி  திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. தற்போது பெட்ரோல் குண்டு விச்சு கலாச்சாரம் தமிழகத்தில் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன்மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டதோ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதேசமயம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்