கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு! உளவுத்துறை ஆணையரை நியமித்து டிஜிபி உத்தரவு!
கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்தடுத்து நிகழந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து உளவுத்துறை உதவி ஆணையர் மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார். சிங்காநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் நிலையில், டிஜிபி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து கோவை முழுவதும் போலீஸ், அதிவிரைவு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தடுக்கும் வகையில் 18 தனிப்படை போலீஸ் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றன. இதனால் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.