ஆளுநர் மாளிகை பெட்ரோல் பாட்டில் வீச்சு.. மயிலாடுதுறை சம்பவம்.! தமிழக காவல்துறை விளக்கம்.! 

Tamilnadu Police Release CCTV footage for karuka vinoth petrol bomb incident

நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை முன்பு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு (தடுப்பு பலகை) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து , எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது.  குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்பது போல பதிவிட்டு இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

பெட்ரோல் பாட்டில் வீச்சு தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் விளக்கம் அளித்து இருந்த நிலையில், இன்று மீண்டும், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து சிசிடிவி காட்சிகளை காண்பித்து விளக்கம் அளித்தனர்.

அதில் முதலில், குற்றவாளி கருக்கா வினோத் நந்தனம் கலை கல்லூரி வழியாக கையில் ஒரு பையுடன் நடந்து செல்வது காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற சிசிடிவி கேமிராக்கள் மூலம், சைதாப்பேட்டை பாலம் வழியாக நடந்து வருவது கான்பிக்கப்பட்டு , உடன் யாரும் இல்லை தனியாக தான் கருக்கா வினோத் ஒரு பையுடன் வருகிறார் என காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் சர்தார் படேல் சாலையில், ஆளுநர் மாளிகை எதிர்புறம் உள்ள ரோட்டின் அந்த பக்கம் கருக்கா வினோத் நின்று கொண்டு பெட்ரோல் பாட்டில்களை சாலையின் அந்த பக்கம் வீசியுள்ளார். இது பேரிகார்டு (தடுப்பு பலகை) பக்கம் விழுந்துள்ளது. ஆளுநர் மாளிகை நோக்கி கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. மேலும் கருக்கா வினோத் எங்கும் ஓடவில்லை. அங்கேயே தான் நிற்கிறார்.

பிறகு ஆளுநர் மாளிகை ஊழியர்கள் யாரும் பிடிக்கவில்லை. 5 சென்னை காவல்துறையினர் தான் கருக்கா வினோத்தை வெளியில் உள்ள சாலையில் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முற்படவில்லை. என ஆளுநர் மாளிகை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் குறித்தும், அன்று உண்மையில் நடந்தது என்ன என சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான உயர் அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அடுத்து மயிலாடுதுறை சம்பவம் குறித்தும் விளக்கம் அளித்தனர். அந்த சம்பவம் பற்றி கூறுகையில், மயிலாடுதுறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்று கொண்டிருக்கும் போது கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் ஆளுநர் வாகனம் மீது வீசப்பட்டது. இதில் உடல் ரீதியாக ஆளுநர் பாதிக்கப்பட்டார் என்றும், ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுவது உண்மையில்லை என்றும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை காண்பித்து, ஆளுநர் ரவி மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க நின்றவர்களை மறைக்கும்படி, காவல்துறை வாகனம் அவர்களை மறைத்துவிட்டது. அதனையும் மீறி ஒரே ஒரு கொடி மட்டுமே ஆளுநர் வாகனம் மீது விழுந்தது. அதனால் ஆளுநர் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை.

மேலும் ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரை ஏற்கவில்லை என்று கூறுவது உண்மையல்ல. சம்பவம் நடந்தது ஏப்ரல் 19ஆம் தேதி காலையில். அன்று மாலையே 73 பேர் கைது செய்யப்பட்டனர். 53 சாட்சியத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம் என மயிலாடுதுறை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் கொண்டு தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது.

மேலும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்