ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.! காவல்துறை விளக்கம்.! 

Chennai Commissioner Prem Anand Sinha

இன்று  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் முன்பு தேனாம்பேட்டை பகுதியியை சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் வினோத்தை கைது செய்து உள்ளனர்.

இவர் இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி அதன் பெயரில் சிறை தண்டனை பெற்று சென்ற வாரம் தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் கருக்கா வினோத்.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு – அண்ணாமலை கண்டனம்

இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் குறித்து சென்னை பெருநகர் தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், தேனாம்பேட்டையை சேர்ந்த 43 வயதான கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை மெயின் கேட் முன்பு பேரிகார்டு அருகில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம நான்கு பெட்ரோல் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம்.

இரண்டு வருடம் முன்பு தான் பிரபல கட்சி அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான். பெட்ரோல் குண்டு வீசிய பொழுது வினோத் குடிபோதையில் இருந்துள்ளார்.

தற்போது கைது செய்து செய்யப்பட்டுள்ள வினோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.  வினோத் மீது ஏழு குற்ற வழக்குகள் உள்ளது. ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் கொண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகை கேட் அதற்கு முன்னர் இருக்கும் பேரிகார்டு வரை தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. ஒரே ஒரு பெட்ரோல்குண்டு மட்டுமே வீசப்பட்டு உள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்று கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்