ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

Karuka Vinoth - Raj bhavan Chennai

நேற்று ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரிகார்ட் பக்கம் பெட்ரோல் குண்டு வீசிய உடனேயே பாதுகாப்பு பணியில் இருந்த  காவலர்கள் கருக்கா வினோத்-ஐ தடுத்து உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்திடம் இருந்து வீசுவதற்கு வைத்து தயார் நிலையில் வைத்து இருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.! காவல்துறை விளக்கம்.!

அதன் பிறகு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் நேற்று சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் ஆணையர் பிரேம் குமார்  சின்ஹா விளக்கம் அளித்து இருந்தார். அதில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகை முன் இருந்த பேரிகார்ட் மீது தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றும் கருக்கா வினோத் மீது பல்வேறு வழக்குகள் இருப்பகவும், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும் பிரேம் குமார் சின்ஹா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது, கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் உட்பட மொத்தம் 14 குற்றவழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது காவல் துறையினர், வெடிபொருள் தடுப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக ஆளுநர் மாளிகையில் இருந்து காவல்துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் போதிய பாதுகாப்பு அளிக்கவும் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்