பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம்போல இயங்கும்..!
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம்போல இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் பங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் மட்டும் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.