20-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே 5 ரூபாய் மற்றும் 10 ரூபாயை மத்திய அரசு குறைத்தது.எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக அமைந்தது.
இந்நிலையில்,சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய், டீசல் ஒரு லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,20-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கே (பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய், டீசல்ஒரு லிட்டர் 91.43) விற்பனை செய்யப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…