116-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை!

சென்னை:116-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,116-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கிடையில்,ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.6 முதல் ரூ.8 வரை உயர வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.இது,வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025