பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை -இன்றைய நிலவரம் இதோ!

சென்னை:79-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இதற்கிடையில்,கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி,பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.79-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025