பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்..!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அதிகளவில் இல்லை என்றார். மேலும், பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.இனி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக இது தொடர்பாக வலியுறுத்தும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.