தொடர்ந்து 13 வது நாளாக உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.81.82 வும், டீசல் லிட்டர் ரூ.74.77 க்கும் விற்பனை ஆகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது . உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டது. அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக்கொண்டேதான் செல்கிறது.
இந்நிலையில் தொடர்ந்து இன்று 13-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்ந்து 81.82 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலையும் லிட்டருக்கு 54 பைசா உயர்ந்து 74.77 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 13 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.6.28 மற்றும் ,டீசல் ரூ.6.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.