சசிகலாவிற்கு “Z PLUS” பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு மனு.!

Default Image

சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்.

சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை செயலாளருக்கு வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. தாமாக உணவு உட்கொள்கிறார், உதவியுடன் நடக்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது என மருவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சிறையில் அடைக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா ஜனவரி 26-ஆம் தேதி நாளை சிறையில் இருந்து விடுதலையாவது உறுதி ஆனது. சிறை கட்டுப்பாட்டிலிருந்து சசிகலாவை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும், அதற்கான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment