கடந்த அக்டோபர் மாதம் கேரளா அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்டு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கும்பலில் இருந்து சோனா ,தீபக் மற்றும் ஸ்ரீமதி தப்பியோடி விட்டனர்.கடந்த நவம்பர் 9-ம் தேதி பில்லூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஸ்ரீமதி, சோனாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று முன்தினம் ஆனைகட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவை வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகன சோதனை நடத்தி போலீசார் பேருந்தில் இருந்த ஸ்ரீமதியை கைது செய்தனர்.
பின்னர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையெடுத்து ஸ்ரீமதியை வரும் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
கோவை மாவட்ட கியூ பிரிவு போலீசார் ஸ்ரீமதியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…