பாதுகாப்பு கோரி பாஜக சார்பில் டிஜிபியிடம் மனு…!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு
தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனால் கோவை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை இறையன்பு அவர்கள், காணொளி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து, டிஜிபி, ஐஜி சுதாகர், ஆட்சியர் மற்றும் ஆணையருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, மற்றும் தோழமை அமைப்புக்களின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சமீப காலமாக தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது பாஜக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.