அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு… நாளை தீர்ப்பு.!
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவில் நாளை தீர்ப்பு.
அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணைக்கு நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வழங்குவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என அனுமதி வழங்கி உத்தரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜாமின் மீதான மனுவும் இன்று விசாரிக்கப்படாத நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனுவின் தீர்ப்பை பொறுத்து நாளை ஜாமின் மீதான மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.