நாளை முதல் ஏப்ரல் 5 வரை கூகுள் பேவுக்கு தடை கோரி மனு..!
நாளை முதல் ஏப்ரல் 5 வரை கூகுள் பேவுக்கு தடை கோரி புகார் மனு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கு படையினரும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மக்களுக்கு நேரடியாக பணம் தராமல் பணப் பரிமாற்ற செயலிகளான கூகிள் பே, போன் பே போன்றவை மூலம் பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராம சுப்பிரமணியன் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் பணப் பரிமாற்ற செயலிகளான கூகிள் பே, போன் பே செயலிகள் மூலம் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க வேண்டும். மேலும், நாளை முதல் 5 தேதி வரை பணபரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.