தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டு இருந்த போது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார்.அப்போது பின்னே வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியது.இதனால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் விழாக்கள் , பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து டிராபிக் ராமசாமி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசும் பேனர் வைக்க தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…