ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி.!

Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைகளின் படி நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி.

ஜெயலலிதா மரணம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணம் தொடர்பாகவும், அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.

ஆறுமுகசாமி விசாரணை குழு:

இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக, எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆறுமுகசாமி தலைமையிலான குழு, தனது விசாரணையை தொடங்கி நடத்தியது.

அறிக்கை:

விசாரணைக்கு பின் தனது அறிக்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. அவரது விசாரணையின் முடிவில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்