மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கான ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த விவாத நிகழ்ச்சியில் தன்னை குறிப்பிட்டு தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி கிரிக்கெட் வீரர் டோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர் மற்றும் போலீஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் டோனி தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவில் பல தகவல்கள் மறைந்து உள்ளதாகவும், கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் விதமாக டோனி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தொலைக்காட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அது போல டோனியின் இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரும் மனு தாக்கல் செய்துள்ளார். தற்பொழுதும் சென்னை உயர்நீதிமன்றம் மான நஷ்ட ஈடாக 100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…