யுடியூப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு.
கடந்த சில வாரங்களாகவே, கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனல் மூலம், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அந்த யுடியூப் சேனலை நிர்வகித்து வரும் சுரேந்தரன் மற்றும் செந்தில்வாசன் என்பவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யுடியூப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘தனி நபர்கள் சிலர் தங்களுடைய பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகளால் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் ஆபாசம் உள்ளடக்கங்கள் அடங்கிய செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது என சமூக வலைதளங்கள் விதிகள் வகுத்துள்ள போதும், இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடபடுகின்றன. அவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை .
கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களை கண்காணிக்க மாநில சைபர் கிரைம் போலீசார் வலுப்படுத்த மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளை பின்பற்றி இருந்தால் இது போன்று சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும். கந்த சஷ்டி கவசம் தொடங்கி, மாதா நல்லிணக்கதை சீர்குலைக்கும் இது போன்ற வீடியோக்களை வெளியிட யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…