ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மே 31-ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இதனால் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றம் வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது , தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…