கடலில் பேனா சின்னம் அமைக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி துரை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு.
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கடல் வளத்தை பாதுகாக்கவும், கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்று சூழல் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில், மீனவர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு அனுமதி கேட்டுள்ளது. அவர்களும் அனுமதி அளித்து விட்டால், அடுத்ததாக கட்டுமான பணிகள் தூங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றமத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பேனா சின்னத்திற்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.