ஜெயலலிதாவின் உயிலை வெளியிட உண்ணாவிரதம்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட கோரி, உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்து வந்த ஜெயலிலதா, டிசம்பர் 5ஆம் தேதி 2016ஆம் தேதி உயிரிழந்தார். அவர் இறப்புக்கு பல்வேறு சர்ச்சைகள் அந்த சமயம் எழுந்தன.
சென்னை, மாங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட கோரி அவர் சமாதி முன்பு உண்ணாவிரம் இருக்க அனுமதி தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது.’
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து பதில் கூற, டி.ஜி.பி மற்றும் சென்னை ஆணையர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.