அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வரும் 22-ம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும் எனவும் சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் பிற்பகல் 2:30 மணிக்குப் பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…