#BREAKING: அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி.
சட்டவிரோதமாக செம்மண் எடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரும் அமைச்சர் பொன்முடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2006-11-ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்தார்.
வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொன்முடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த மொத்தமான ஆதாரங்கள் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்படுத்தியாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.