சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.இன்று இந்த மனு மீதான விசாரணையில், வரும் 15-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…