எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியவர் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்தார்.
எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்திய செயலுக்கு அதிமுக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பழனிச்சாமி நேற்று தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்தநிலையில், தமிழக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியது, சமூக விரோதிகளின் செயல் எனவும், அவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என கூறினார்.
மேலும் பேசிய அவர், மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை தினம் தினம் எதிர்கொண்டு வரும் நேரத்தில், சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் எனவும், அவர்களை சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என தெரிவித்த அவர், இதுபோன்ற செயல்களை செய்பவர்களை சமூகத்தில் இருந்து புறந்தள்ள வேண்டும் என தெரிவித்தார்.
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…