சென்னையின் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தை, இந்தியாவில் தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய 17 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் 2-ஆம் கட்ட சோதனை பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நான்கு முதல் ஆறு வாரங்களில் பொது சுகாதார இயக்குநரகம் தமிழ்நாட்டில் உள்ள ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் எனப்படும் தடுப்பூசியை வழங்கவுள்ளது.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…