2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2022 – 23 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 10 அரசு மற்றும் கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரி அவர்களால் 13.08.2021 அன்று 2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் போது, 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 26.08.2021 அன்று உயர்கல்வித துறையின் மானியக் கோரிக்கையின் போது “தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும், 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம்-திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம்-திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம்-தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம்-மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம்-எரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். திருவாரூர் மாவட்டம்-கூத்தாநல்லூரில் ஒரு பதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படவுள்ளது.
மேற்படி அறிவிப்பிற்கிணங்க, மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பிய கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனடிப்படையில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (9 இருபாலர் கல்லூரிகள் மற்றும் ஒரு மகளிர் கல்லூரி) துவங்க அனுமதியும், ஒவ்வொரு கல்லூரியிலும் இளங்கலை (தமிழ்), இளங்கலை (ஆங்கிலம்) இளமறிவியல் (கணிதம்), இளநிலை (வணிகவியல்) மற்றும் இளமறிவியல் (கணினி அறிவியல்) ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்குவதற்கு அனுமதியும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 17 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 10 கல்லூரிகளுக்கு மொத்தம் 170 ஆசிரியர்கள் மற்றும் 170 ஆசிரியரல்லாப் பணியிடங்களை இவ்வாணையின் இணைப்பில் கண்டவாறு தோற்றுவித்தும் கீழ்க்கண்டவாறு 10 சுல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் செலவினமாக ரூ.21.23,40,600/-மற்றும் தொடராச் செலவினமாக ரூ.3.60.00,000/- ஆக மொத்தம் ரூ.24,83,40,600/-க்கு (ரூபாய் இருபத்து நான்கு கோடியே எண்பத்து மூன்று இலட்சத்து நாற்பதாயிரத்து அறுநூறு மட்டும்) நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…