திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரையின்படி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பலவேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே, கிட்டத்தட்ட 6 மாத காலமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க கூறி அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
தற்போது வெளியிட்டுள்ள 4 ம் கட்ட ஊரடங்கு தளர்வில், திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…