5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்க அனுமதி தேவை.!
தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு தேவை என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு உள்ள நிலையில் இருசக்கர வாகனஓட்டிகள் பலர் கட்டுப்பாடு இல்லாமல் வருகின்றனர் என முரளி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அரசு வலியுறுத்திய பால், காய்கறி போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேர சேவை செய்யப்படும் என்று பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி, முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. மேலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.