கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியதால் மார்ச் 26-ம் தேதி முதல் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டது. முக்கிய வழக்குகள் மட்டும் காணொளி மூலம் விசாரிக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அதன் பின்னர், தமிழகத்தில் கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை இன்று திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்கபாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என கூறியது. மேலும், வள்ளியூர் (நெல்லை), ஆலங்குளம் (நெல்லை), அரக்கோணம் (வேலூர்), ஸ்ரீரங்கம் (திருச்சி), மேலூர் (மதுரை) ஆகிய தாலுக்காக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால், காணொளி மூலம் விசாரணை தொடர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…