இன்று முதல் மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி…!
- தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இன்று முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்தது.
அதன்படி, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.