ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி., ஆனால் இவர்களுக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு

Default Image

தமிழகத்தில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைககளுக்கு ஏசி வசதியுடன் பேருந்துகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர். ஏசி பேருந்துகளில் 65 வயதான நபர்களை அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் 25 முதல் 702 ஏசி அரசு பேருந்துகளை இயக்கததால் வருவாய் கடும் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்