சென்னையில் இன்று முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 833 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 8324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் கொரோனாவால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,சென்னையில் இன்று முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அனைத்து தொழிற்பேட்டைகளிலும் 25 சதவீத அளவிலான பணியாளர்களை இயங்குமாறும், பணிக்கு வரும் தொழிலார்கள் அனைவரின் உடல்வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
முகக்கவசம் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும். அங்கு பணியாளர்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடன் பணிபுரிய வேண்டும். மேலும், பணியாற்றும் இடங்களை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக, 55 வயது மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டாம் என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…