இன்று முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதலமைச்சர் பழனிசாமி
இன்று முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.அதாவது,இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார் .அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.