செப்.1 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்க அனுமதி – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு!
வரும் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில், வரும் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma courses, Polytechnic Colleges) கழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுபோன்று செப்டம்பர் 1 முதல் 9,10,11, 12 ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.