கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என்று மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை
பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைலாச என்ற தனி நாட்டை உருவாகியுள்ளதாகவும், அதற்கு தனி ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய நாணயங்கள் என 5 வகையான கரன்சிகளை வெளியிட்டார். நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த நித்யானந்தா, அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தனது கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பின்னரும் கோரிக்கை பட்டியல் நிறைவு பெறுவதாக இல்லை. இப்போது புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என்று மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கையில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது மிகவும் சவாலாக உள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நித்தியானந்தா எப்போது பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…