கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி ரத்து – தமிழக அரசு…!
கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி ரத்து.
குடியரசு தினம் ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை வைப்பார்கள்.கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம். இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.