திருக்கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!
திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.
திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுவிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் என்று 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற போவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிருந்தார்.
இந்த நிலையில், 48 முதுநிலை திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள், தேர்த் திருவிழாக்கள், வருஷபிசேகங்கள், கொடை விழாக்கள் போன்றவற்றின் போது இவ்விழாக்களின் சிறப்பம்சங்கள், பெருமைகள், வழிபாட்டு முறைகளின் தத்துவங்கள், தலவரலாறுகள், இறைவனின் சிறப்புக்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டுகளித்து இன்புற்று மகிழும் வண்ணமும் ஆண்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெற வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த தேவையான நிதியினை திருக்கோயில் வரவு செல்ல திட்டத்தில் ஒதுக்கீடு செய்து உரிய அனுமதி பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.