#BREAKING: நவம்பர் முதல் மெரினாவிற்கு செல்ல அனுமதி..?
நவம்பர் முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மெரினா சுத்தம், பாதுகாப்பபு மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் அதுவரை மெரினா திறக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்ததது. அப்போது , சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் காணொளி மூலம் ஆஜரான நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நீதிபதிகள் மெரினா எப்போது திறக்கப்படும் என கேட்டபோது, வருகின்ற நவம்பர் மாதம் மெரினா உட்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் திறக்கப்படும் என நம்புகிறோம். மேலும், 60 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.