தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டதால் பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, உணவகங்களில் கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் இருக்க வேண்டும். எல்லா வாடிக்கையாளர்களும் உடல் வெப்ப பரிசோதனை செய்துபின் தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை அனுமத்திக்க கூடாது.
அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் இருக்க வேண்டும், கழிவறைகளை தினமும் 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். ஏசி ரூம்களை இயக்க கூடாது.
50% இருக்கைகள் மட்டுமே அனுமதி. டேபிள்களுக்கிடையில் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும். ஊழியர்கள் கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. இன்று முதல் டீ கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…