10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி.! தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி வழங்கி, துணைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, 10, 11,12-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் 10-ம் வகுப்புத் துணைத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
11-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும். அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில், தமிழக அரசு, தனித் தேர்வை நடத்த அனுமதி அளித்து, துணைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதில், மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிறிய அறையாக இருந்தால் 10 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. 400 சதுர அடி உள்ள அறையாக இருந்தால் 20 மாணவர்கள் வீதம் அமர வைக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுக்குத் தனி அறைகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், ஹால் டிக்கெட்டுகளை இணைய வழியில் பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள துணைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.#sslc #hsc #SupplementaryExams #TNGovt pic.twitter.com/4XG39w2yf5
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 28, 2020