கடுமையான ஒழுங்குகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி
இந்த நிலையில், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குகளுடன் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்.மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…