மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி கோவாக்சினுக்கு அனுமதி – சு.வெங்கடேசன் ட்வீட்

Default Image

இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா? என்று சு.வெங்கடேசன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசியும் உள்ளன.

ஆகவே ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.ஆனால் தடுப்பூசியின் ஒப்புதலுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,   பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு. “தடுப்பூசி அவசரமானது அவசியமானது” என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சுனுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பை நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது.இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai