#BREAKING: பேருந்து சேவைக்கு அனுமதி..? முதல்வர் ஆலோசனை..!

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து தலைமைச்செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை, அரசுத்துறை அதிகாரியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்கலாமா..? ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதிக்கலாமா..? பெரிய கடைகளை ஏ.சி இல்லாமல் செயல்பட அனுமதிக்கலாமா..? கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிப்பது குறித்தும் முதல்வர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025