#BreakingNews : மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்தார்.
இதனால் நேற்று ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. மேலும், சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கியது. இந்நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதி!
செப்.7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி.
#BusTransport |@CMOTamilNadu | #TNGovt pic.twitter.com/JgThdSmIyJ
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 2, 2020
z