திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் கே.பி.ராமலிங்கம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு பணிகளில் அரசியல் பாகுபாடின்றி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அடுத்து, கே.பி.ராமலிங்கம் திமுகவில் வகித்து வந்த விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பாக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக (சஸ்பெண்ட் ) திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இந்நிலையில் கே.பி.ராமலிங்கத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…