“பெரியார் வைத்திருப்பது வெங்காயம்”…மீண்டும் விமர்சித்த சீமான்!
பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாவே தந்தை பெரியார் குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக, சமீபத்தில் கூட “பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்..இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் இது மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என ஆவேசமாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரையின்போது பெரியார் வைத்திருப்பது வெங்காயம்… என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு” என மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவர் ” பெரியார் வைத்திருப்பது வெங்காயம்; என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. நீ உன் பெரியாரின் வெங்காயத்தை வீசு, நான் என் தலைவன் கொடுத்த வெடிகுண்டை வீசுகிறேன்.பெரியார் ஆரிய அடிமை. அவர் ஆரிய கூட்டாளி மட்டுமல்ல, ஆங்கிலேய அடிமையாகவும் வாழ்ந்திருக்கிறார். திராவிட தத்துவம் செத்துப் போய்விட்டது. தமிழ்த் தேசியம் சத்தோடு எழுந்து வருகிறது” எனவும் பேசியிருந்தார்.
சீமான் சொன்ன இந்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “பெரியாரின் வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை நுழையவிடாமல் தடுத்துள்ளது” என்று இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025