“பெரியார்” பெயரை ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்!

தமிழகத்தில் திராவிட இயக்க முன்னோடியான பெரியார் அவர்களின் பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் புதிய அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி , ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கும் வேளையில் அதை எப்படி தனியாரிடம் ஒப்படைக்க இந்த அரசு முன் வந்தது என்று வினவியுள்ளார். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 839 கோடி ரூபாய் எங்கே போனது என்றும் கேட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை , சேலம் உருக்கு ஆலை ஆகியவற்றை தனியாருக்கு ஒதுக்க மத்திய அரசு ஒதுக்கியிருப்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025